Editorial / 2025 நவம்பர் 17 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

Weathering Grounds நிகழ்வு குறித்து MeshGround அறிவிப்பு: காலநிலை, அக்கறை, மற்றும் நீதி ஆகியவற்றுக்கான நடனம் மற்றும் இயக்கம் குறித்த ஆய்வுச் செயலமர்வு
Alleyne Dance (ஐக்கிய இராச்சியம்) மற்றும் ClimArts (ஐக்கிய இராச்சியம்/இந்தியா) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தான் பெருமையுடன் ஏற்பாடு செய்துள்ள Weathering Grounds என்ற கலப்பு நடன ஆய்வுச் செயலமர்வு குறித்து MeshGround (இலங்கை) பெருமையுடன் அறிவித்துள்ளது.
முன்னணி சமகால நடன நிறுவனமும், ஒரு இயக்கத் தளமுமான MeshGround, தான் செயல்பட ஆரம்பித்தது முதற்கொண்டே உரையாடல், செயல் நடவடிக்கை, மற்றும் விமர்சன ரீதியான விசாரணை ஆகியவற்றுக்கான மொழியாக நடனத்தை மாற்றியமைக்கின்ற வலுவானதொரு மையமாக மாறியுள்ளது.
இலங்கையில் உடல் அசைவுக் கலைஞர்களின் அடுத்த தலைமுறையை வளர்ப்பதில் MeshGround ன் பெரும்பற்றினைக் காண்பிக்கும் மற்றுமொரு முயற்சியாக Weathering Grounds ஆய்வுச் செயலமர்வு காணப்படுகின்றது. வேகமாக மாறிவரும் உலகில், உடல் அசைவு, நடனம், மற்றும் நிகழ்வு ஆகியன எவ்வாறு தீர்வுகள், நெகிழ்திறன், அக்கறை, மற்றும் நீதி ஆகியவற்றை உள்ளடக்கும் என்பதை ஆராயும் ஒரு ஆழமான படைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு இலங்கையைச் சேர்ந்த நடன நெறியாள்கையாளர்கள், நடனக் கலைஞர்கள், நிகழ்வு மற்றும் இயக்க கலைஞர்களுக்கு இச்செயலமர்வு அழைப்பு விடுக்கின்றது.
“நெகிழ்திறன் மற்றும் மீள்கற்பனை ஆகியவற்றுக்கான மொழியாக இயக்கம் எவ்வாறு மாறுகின்றது என்பதை படைப்பாக்கம், ஒத்துழைப்பு, மற்றும் அக்கறை ஆகியவற்றினூடாக ஆராயும் ஒரு நிகழ்வே Weathering Grounds” என்று MeshGround ன் இணை ஸ்தாபகரும், கலை இயக்குனருமான உமேஷாரஜீந்திர அவர்கள் விளக்கினார். இணைய வழி ஆய்வு (2026 ஜனவரி 9-12) மற்றும் கொழும்பில் இடம்பெறும் நேரடி ஆழமான படைப்பு நிகழ்வு (2026 ஜனவரி 24-31) ஆகியவற்றை Weathering Grounds உள்ளடக்கியுள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர்அனுசரணையாளர்களின் வழிகாட்டலுடன், செயலமர்வுகள், கூட்டு ஆய்வுகள், மற்றும் நடன ஆராய்ச்சி ஆகியவற்றில் இதில் பங்கேற்பவர்கள் ஈடுபடவுள்ளனர்.

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆசிய-பசுபிக், ஐரோப்பா ஆகியவற்றிலுள்ள நாடுகள் ஆகியவற்றுக்கிடையில் கலைரீதியான ஒத்துழைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் British Council ன் Connections Through Culture (CTC) Programme என்ற நிகழ்ச்சித்திட்டம் இச்செயலமர்வுக்கு ஆதரவளிக்கின்றது. கலாச்சாரங்களுக்கு இடையிலான பரிமாற்றம், மற்றும் நீடித்து நிலைபெறும் உறவுமுறைகள் ஆகியவற்றை வளர்ப்பதில், கலைஞர்கள், படைப்பாக்க செயற்பாட்டாளர்கள் மற்றும் கலை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையில் ஒத்துழைப்பிற்கான செயற்திட்டங்களுக்கு இம்மானியங்கள் உதவுகின்றன. இலங்கையில் British Council ஸ்தாபனத்தின் பணிப்பாளரான ஒர்லாண்டோ எட்வேர்ட்ஸ் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “CTC மானியத் திட்டம் இந்த அளவுக்கு வளமான மற்றும் பன்முகப்பட்ட விண்ணப்பங்களை ஈர்த்துள்ளது என்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், இலங்கையின் கலாச்சார துறையின் வலிமைக்கு இது சிறந்த சான்றாகவுள்ளது. சமூக அக்கறை மற்றும் உத்வேகமளிக்கும் கலை ஆகியவற்றைத் தோற்றுவிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ள இந்த ஐக்கிய இராச்சியம்/இலங்கை கலை ஒத்துழைப்பின் பலனை விரைவில் காண்பதற்கு நான் ஆவலாக உள்ளேன்.”
Weathering Grounds நேரடி செயலமர்வு முற்றிலும் இலவசம் என்பதுடன், பல்வேறுபட்ட துறைகள், நுட்பங்கள், மற்றும் இயக்க வடிவங்கள் மத்தியில் தமது தொழில் வாழ்வில் அனைத்து கட்டங்களிலுமுள்ள கலைஞர்களையும் இது வரவேற்கின்றது. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட அல்லது கட்டமைப்பு ரீதியாக புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த கலைஞர்கள் மற்றும் காலநிலை நீதி, சமூக நீதி, மற்றும் மோதலுக்குப் பின்னரான கருப்பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் ஆகியோரிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் குறிப்பாக ஊக்குவிப்படுகின்றன. நேரடி செயலமர்வில் பங்குபற்றுவதற்கு கொழும்பிற்கு வெளியிலிருந்து வருகை தருகின்ற கலைஞர்களுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்யப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், விண்ணப்பங்களை info@meshground.org மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும். கலைஞர்கள் www.meshground.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 0777268518 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago