J.A. George / 2025 நவம்பர் 25 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து 35 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வைஃபை ஆண்டெனாக்களை வழங்குவதாக உறுதியளித்து பொருட்களை வழங்கத் தவறி ஒரு தனியார் நிறுவனத்திடம் சுமார் ரூ.36.99 மில்லியன் மோசடி செய்துள்ளனர்.
இரண்டு நபர்களும் நேற்று (24) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர்.
34 மற்றும் 37 வயதுடைய சந்தேக நபர்கள் மட்டக்குளிய மற்றும் வத்தளையைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் நேற்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிசெம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
14 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
34 minute ago