2025 ஒக்டோபர் 13, திங்கட்கிழமை

நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்பு

Simrith   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும்  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்த நிஷாந்த ஜயவீர ஆகியோர்  இன்று (13) காலை நிதி அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமைச்சுப் பதவியை வகிப்பது ஒரு சலுகையாக கருதுவது வரலாற்றின் இணைந்துள்ள ஒரு கருத்து என்றும், அது உண்மையில் ஒரு சலுகை அன்றி மாறாக ஒரு பொறுப்பு என்றும்  தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  கருத்துத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு பங்களித்த அதிகாரிகள் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி எடுத்துச் செல்வதில் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமைச்சின் அதிகாரிகள்   இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X