2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நந்தனவின் பூதவுடலுக்கு சஜித் அஞ்சலி

Janu   / 2026 ஜனவரி 19 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நந்தன குணதிலகவின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையும் கவலையும் அடைந்துள்ளேன். நமது நாட்டின் அரசியல் பரப்பில் ஒரு புரட்சிகர பாத்திரமாக மக்கள் சேவைக்காக வேண்டி இவர் பாடுபட்டவர் ” என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மறைந்த நந்தன குணதிலக்கவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (19) காலை இறுதி அஞ்சலி செலுத்தினர். இச்சமயம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நந்தன குணதிலகவின் பூதவுடலுக்கு முன்னால் இருந்து கொண்டு அரசியல் தொடர்பில் பேசுவது பொருத்தமான விடயமாக நான் கருதவில்லை. நாமனைவரும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கே பாடுபட வேண்டும். இவரது நோய் குறித்து முன்கூட்டியே நான் அறிந்திருந்தால், இவர் சார்பாக இதைவிடவும் கூடிய தலையீடுகளை செய்திருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவருக்குச் சிகிச்சையளித்த சகல வைத்தியர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். யார் எந்த தராதரங்களில் இருந்தாலும், எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது யார் என்ன கதைகளைக் கூறினாலும் மனித உயிர் விலைமதிப்பற்றது எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X