Simrith / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகிய நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் மின்சார கட்டணம் தொடர்பான செய்திக்கு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.
தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்கான மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில், சுமார் 26 இலட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்தின் 2.6 மில்லியன் மின்சாரக் கட்டணம் நேற்று (02) நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் செலுத்தப்பட்டது.
போரை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அரசியலிலும் வர்த்தகத்திலும் அவருக்கு ஆதரவாக இருந்த நண்பர் என்பதாலும் தான் இந்தப் பிரச்சினையைத் தான் தீர்த்து வைத்ததாக ராஜாங்க அமைச்சர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
“இன்று நான் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சார்பாக மின்சார சபைக்கு மொத்த மின்சார கட்டணமான 2,682,246.57 ரூபாவை செலுத்தினேன்.
“நான் இலங்கை மின்சார சபையின் தலைவரைச் சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்கான இந்த சர்ச்சைக்குரிய மின்சாரக் கட்டணத்தைப் பற்றி கலந்துரையாடினேன்.
நான் நாமல் ராஜபக்சவிடம் பேசியபோது, தானோ அல்லது தனது தந்தையோ திருமணத்திற்கு கூடுதல் மின்சாரம் கோரவில்லை என்று கூறினார்.
ஆனாலும் இவ்வாறாக மின்சார கட்டணம் தொடர்பில் வதந்தி ஒன்று பரவி வருகிறது” என தெரிவித்தார்.
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்த தலைவர். அவர் மீது யாரிடமும் பழி சுமத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே கட்டணம் செலுத்தப்படவில்லையென்றால் அதை நான் செலுத்துவேன்” என நான் அவரிடம் கூறினேன்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டனர்.
எனவே, பாதுகாப்பு தரப்பினர் அவர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு மின்விளக்குகளைக் கோரியிருந்தனர். ஆனால் இதற்கான கட்டணம் ஜனாதிபதி, பாதுகாப்புப் பிரிவு அல்லது வேறு எந்த நிறுவனத்தாலும் செலுத்தப்படவில்லை. இது வாய்மொழியான வேண்டுகோள், அதன்படியே இலங்கை மின்சார சபை மேலதிக வசதிகளை வழங்கியது.
"ஆனால் திருமணம் முடிந்தபின் மற்றும் இரண்டாவது குழந்தை பிறந்ததையடுத்து, செலுத்தப்படாத கட்டணப் பட்டியல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. எனவே, அவர்களுக்கான கட்டணத்தை செலுத்துவது அனைவருக்குமான பொறுப்பு என நான் நினைக்கிறேன்.” என இராஜாங்க அமைச்சர் கூறினார்.
"எனவே, எனது சொந்த நிறுவனமான 'Royalco Aqua Culture (Pvt) Ltd' கணக்கிலிருந்து கட்டணத்தை செலுத்த முடிவு செய்தேன்.
நான் கட்டணத்தை செலுத்தியது நாமல் ராஜபக்சவுக்கு தெரியாது, ஆனால் அதைப்பற்றி இன்று மாலை நான் அவரிடம் கூறுவேன்" என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
7 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
4 hours ago