2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா

Kogilavani   / 2021 மே 16 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவர், அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொகவந்தலாவை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில், நேற்று(15) மேற்கொள்ளப்பட்ட ரெபிட்
அன்டிஜென் பரிசோதனையிலேயே, தவிசாளருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல்
ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 13ஆம் திகதி நோர்வூட் பிரதேச சபையின் அமர்வு இடம்பெற்றுள்ளமையால்,

சபை  உறுப்பினர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்  நோர்வுட் பிரதேச சபை கலவரையின்றி முடப்படவுள்ளதாகவும் பொகவந்தலாவ பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .