2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நள்ளிரவு நீண்ட தூர பேருந்துகள் அறிமுகம்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையால் இயக்கப்படும் நீண்ட தூர பேருந்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் கூட்டு நேர அட்டவணையின் கீழ் இயங்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) அறிவித்துள்ளது.

கொழும்பு-சிலாபம், கொழும்பு - புத்தளம், கொழும்பு - ஆணைமடுவு, கொழும்பு - எழுவன்குளம், மற்றும் கொழும்பு - கல்பிட்டி உள்ளிட்ட பல முக்கிய வழித்தடங்களில் புதிய அட்டவணை அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது.

​மேலும் நீர்கொழும்பு- கல்பிட்டி, கொழும்பு - மன்னார், கொழும்பு - தலைமன்னார், கொழும்பு - குளியாபிட்டி, கொழும்பு - நிக்கவெரட்டிய, கொழும்பு - அனுராதபுரம், கொழும்பு - வவுனியா, கொழும்பு - கிளிநொச்சி, கொழும்பு - யாழ்ப்பாணம், கொழும்பு - காங்கேசன்துறை, கொழும்பு - காரைநகர் மற்றும் கொழும்பு - துணுக்காய் ஆகிய வழித்தடங்களிலும் புதிய அட்டவணை அறிமுகப்படுத்தப்படும்.

அனைத்து பேருந்துகளும் நள்ளிரவில் கொழும்பில், பாஸ்டியன் மாவத்தையில் (BastianMawatha).  உள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தங்கள் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது.

நான்கு மணி நேர பயணத்திற்குப் பிறகு ஓட்டுநர்களுக்கு நியமிக்கப்பட்டஓய்வு நிறுத்தம் வழங்கப்படும்.

செல்லும் வழியில் அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களில் பயணிகளுக்கு சுகாதாரமான உணவு வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X