2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு

J.A. George   / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தினமும், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, இன்று (16) முதல் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன்,  இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளார்.

இதேநேரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, சில வழிகாட்டல்களை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவித்தல், இன்று(15) வெளியிடப்படவுள்ளது.

அத்துடன், நேற்று (15) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானனோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X