2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் நிச்சயம் தமது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. இந்த வருடம் பெப்ரவரி மாதமே அவரது ஆட்சி கவிழ்ந்துவிட்டது.

"அத்துடன், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஆதரவாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாகவும் அது குறித்த இறுதி முடிவை சபாநாயகருக்கு அறிவித்துள்ளாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .