2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதான வதந்திக்கு கரு மறுப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருதலைப்பட்சமாக தான் நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதாகப் பரவும் வதந்திகளுக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தனது ருவிட்டர் வலைத்தளத்தில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், கொரோனா பிரச்சினைக்குள் அரசரமைப்பு பிரச்சினை தேவையில்லை என்றும் தான் ஒருதலைப்பட்சமாக நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதாகப் பரவும் வதந்தி பொய்யானது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், பிரச்சினையைத் தவிர்க்க நிறைவேற்றுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முரண்பாடுகளின் போது நீதிமன்றக் கட்டளைக்கு மதிப்பளிப்து தனது கடமையென்றும் அவர் அதில் தெரிவித்தள்ளார். 

இதேவேளை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், அரசமைப்பு பேரவை இன்று (23)  கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X