J.A. George / 2021 ஜூலை 02 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுவாகல தோட்டத்தின் மேற்பிரிவு
கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தளை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம், கொழும்பு மாவட்டத்தின் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒபேசேகரபுர (514சீ) கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்படப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவு ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

7 minute ago
16 minute ago
43 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
43 minute ago
20 Dec 2025