2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘நாட்டு மக்களை ஏமாற்றும் தீர்மானம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்பாடுகளை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது, நாட்டு மக்களை ஏமாற்றும் செயற்பாடு எனத் தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணி, அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தால், நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி குறையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. 

புஞ்சி பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில், நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுக்குக் கிடைத்த வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்குள், தங்களுக்குத் தேவையான வாகனங்களை கொள்வனவு செய்து முடித்திருப்பார்கள் எனவும், ஆகவே தற்போது இடைநிறுத்தும் உத்தரவு, வெறும் கண்துடைப்பு எனவும் தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்த வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டு வாங்கிய வாகனத்தை, தான் விற்பனை செய்யவில்லை எனவும், இதன்போது அவர் தெரிவித்தார். 

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு, தற்போதைய அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கையே காரணம் எனத் தெரிவித்த அவர், இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையையா அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது என்பதை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X