2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘நாட்டை இயக்குவதற்கான நிதியைப் பெற ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு’

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டத் தொடரிலிருந்து மூன்று மாதங்கள் காலாவதியாகும் வரை, நாட்டை இயக்குவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு, ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்பதால், யாரும் “அரசமைப்பு குண்டர்களாக” மாறுவதற்கோ அல்லது அரசாங்கத்தைக் கொண்டு செல்வது பற்றிக் கவலைப்படவோ தேவையில்லை” என்று, அரைசாங்கம் இன்று (23) அறிவித்தது.

அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குக் கீழ், இந்த முறைமை உள்ளடங்குவதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, எந்தவொரு சூழ்நிலையிலும், நாடாளுமன்றத்தை மறுசீரமைக்கத் தான் விரும்பவில்லை என்றும் தேர்தலை நடத்தவும் அது தொடர்புடைய திகதியை நிர்ணயிக்கவும் என, அனைத்துப் பொறுப்புகளும் தேர்தல் ஆணைக்குழுவின் கைகளிலேயே உள்ளன என்பதை, ஜனாதிபதி மிகத் தெளிவாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே, நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்தான முடிவை, ஜனாதிபதி எடுத்தார் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X