2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நானாட்டான் மக்களுக்கு அவசர வேண்டுகோள்

Editorial   / 2020 மார்ச் 22 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

நானாட்டான்  பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் மக்களில் யாராவது தனியாக அல்லது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த போதகரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருந்தால், உடனடியாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வருமாறு மக்களிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னும் சந்தேகத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

அதே போன்று மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தேக்கம் கிராமத்தில் 6 குடும்பங்களும்   அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்   அவர்களது வீட்டிலேயே அவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ளவர்களில் யாராவது யாழ்ப்பாணம் சென்று குறித்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்தால், அல்லது கலந்து கொண்டவர்கள் தொடர்பில் விவரம் தெரிந்தால் உடனடியாக எம்முடன் தொடர்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .