2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘நானே அடுத்த முதலமைச்சர் வேட்பாளர்’

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து, தானே முதலமைச்சர் வேட்பாளரென,  வட மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

பேரவைச் செயலகத்தில் இன்று (27)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டுமென்று முன்மொழியப்பட்ட போது, மாவை சேனாதிராஜாவும் கைவிட்டதால், தற்போது அனுபவிக்கும் நிலை ஏமாற்றத்திற்குரியதெனத் தெரிவித்தார்.

மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர், தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும், தமிழரசுக் கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஆகக்குறைந்த சேவைக் காலத்தைக் கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தவகையில், பொதுவாக மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தால், ஏற்கெனவே, மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பதாகத் தெரிவித்த அவர், சில சமயங்களில், மாவை சேனாதிராஜா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுமேயானால், அந்த இடத்தில், அடுத்த தெரிவாக, உரித்துடையவன் தான் என்பதே தனது நிலைப்பாடெனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தச் சந்தர்ப்பத்தில், தனது கோரிக்கையை முன்வைப்பதாக, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .