2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'நான் சூழ்ச்சி செய்யவில்லை'

Editorial   / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

சூழ்ச்சியை செய்து நாங்கள் ஆட்சியை கைப்பற்றியதாக எங்கள் மீது குற்றம் சுமத்துக்கின்றனர். அவ்வாறு நான் சூழ்ச்சி செய்யவில்லை எனத்தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ எம்.பி, நீங்கள் ஆளும் கட்சியில் இருப்பதாக எந்நேரமும் நினைத்துகொண்டிருக்கவேண்டாம். நாங்கள் மக்கள் புரட்சியின் ஊடாக, எந்தநேரத்திலும் ஆட்சியை கைப்பற்றலாம் என்றார்.

நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர், தங்களை ஆட்சியமைக்க இடமளிக்கவில்லை. எரிபொருட்களின் விலைககள் குறைக்கப்பட்டுள்ளன. நான், பிரதமராக பதவியேற்றபோது அதனைச் செய்தேன்.

வரியை அதிகரிக்கும் போதும் விலைகளை அதிகரிக்கும் போதும், பட்டினியில் இருக்கும் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவும்.

சர்வதேச நாணய நிதியம் கூறுவதை மட்டும் செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அத்துடன், ஒருவேளையேனும் சாப்பிடாதவர்கள் குறித்து கவனத்தில் கொள்ளவும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .