2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நாமலுக்கு எதிரான கறுப்புப் பண வழக்கு; மார்ச் 7 முதல் விசாரணை

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாயை, தனியார் நிறுவனமொன்றின் ஊடாக பணச்சலவை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, நீதிமன்றம் இன்று (25) தீர்மானித்தது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசார​ணை அறிக்கைகளை, சட்ட மா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், ​இன்று (25) நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .