Niroshini / 2021 மே 07 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கொரோநா வைரஸ் பரவலின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென்று, பொதுச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அந்த வகையில், ஒரு நாளைக்கு குறைந்தது 25 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகளையேனும் செய்யவேண்டும் என்று, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் (PHI) செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததால், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் வேகமடைந்துள்ளதாகவும் அதனால், தொற்றுப் பரவலைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் இது தொடர்பில் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ள போதிலும், நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்த, உரிய தரப்பினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் அறிக்கைகள், இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குப் பின்னரே வழங்கப்படுகின்றன. அறிக்கை கிடைப்பதற்கும், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கோ அல்லது பலருக்கோ, வைரஸ் பரவலடையும் வாய்ப்பு அதிகமாகும். இது ஒரு பாரதூரமான நிலைமையாகும்.
இதேவேளை, நாட்டுக்குள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வைத்தியசாலைகளில் இடப் பற்றாக்குறையும் நிலவி வருகின்றது. இதற்கு மாற்றீடாக, வீடுகளுக்குள்ளேயே தொற்றாளர்களைத் தனிமைப்படுத்தி, அங்கு அவர்களுக்கான சிகிச்சைகளை முன்னெடுப்பதும் சிறந்த வழியென, எமது சங்கம் பரிந்துரைக்கிறது” என்றும், பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
21 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago