Kogilavani / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்
கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட நாவலப்பிட்டியிலுள்ள மாணவி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி ஹப்போட் தோட்டத்தைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்விபயின்று வரும் மாணவி ஒருவருக்கே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மாணவியின் தந்தை ஏற்கெனவே தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்பத்தவர்களுக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலேயே மேற்படி மாணவிக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மாணவி நேற்று (11) இரவு தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேற்படி பாடசாலையின் ஆசிரியர்கள் நால்வர், 9 மாணவர்களும் மாணவியின் குடும்பத்தார் உள்ளிட்டோரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025