2021 மே 17, திங்கட்கிழமை

நிவாரணப் பொருட்களுடன் சென்ற படகு விபத்து: ஒருவர் மாயம்

Editorial   / 2017 மே 30 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் கொண்டு சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் காணாமல் போயுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை - சேருபிட பகுதியில், இன்று (30) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, படகில் ஐவர் இருந்தனரெனவும் நால்வர் காப்பாற்றப்பட்ட நிலையில், சேருபிட பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரைத் தேடும் நடவடிக்கைகளில், கடற்படையினர்,  பொலிஸ் உயிர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளனர்.  

இதேவேளை, அனர்த்தங்கள் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்த 18 பேர், நாடளாவிய ரீதியில் உயிரிழந்துள்ளனரென, பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .