2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு அசம்பாவிதங்களுக்கு நட்டஈடு வழங்க பிரதமர் உத்தரவு

Editorial   / 2019 மே 06 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மையால், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த சேதங்கள் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு, அதற்கான நட்டஈட்டை வழங்குமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரதமர் யோசனை வழங்கியுள்ளாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய  கொள்கைகள்,  பொருளாதார நடவடிக்கைகள், மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் சேதங்களுக்கான அலுவலகம் ஊடாக சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .