Janu / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து உயிரிழந்த நிலையில்மீட்கப்பட்ட சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தையில் செவ்வாய்க்கிழமை(22) மாலை இடம்பெற்றுள்ளது.
மூன்று வயதுடைய முஹம்மத் லுக்மான் என்ற சிறுவனே நீர் குழியிலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
சுமார் 3 மணித்தியாலமாக காணாமல் சென்றிருந்த குறித்த சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடிய நிலையில் சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதுகாப்பற்ற நீர் குழிக்குள் மரணமடைந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் ஜனாஸா தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்

31 minute ago
53 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
53 minute ago
1 hours ago
4 hours ago