Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2022 மே 03 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுரைச்சோலை லக் விஜய அனல் (நிலக்கரி) மின்நிலையத்தில் உள்ள 270 மெகாவோட் மின் பிறப்பாக்கி தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (03) தெரிவித்தார்.
மின் பிறப்பாக்கியை பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து நாட்களுக்குள் மின்நிலையத்தின் மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அனல் மற்றும் நீர் மின் நிலையங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் மின்வெட்டுகளை மேலும் நீடிக்காமல் முகாமைத்துவம் செய்யப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago