2025 மே 01, வியாழக்கிழமை

நெல் பதுக்கிய ஆறு கிடங்குகளுக்கு சீல்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டத்தில் 40 இலட்சம் கிலோ கிராமுக்கும் அதிகமான நெல்லை பதுக்கி வைத்திருந்த இடைத்தரகர்களின் 6 களஞ்சியசாலைகளுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன, இன்று (25) தெரிவித்தார்.

சீல் வைக்கப்பட்ட களஞ்சியங்களிலுள்ள உள்ள நெல் இருப்புக்களை உத்தரவாத விலையில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனை செய்வதற்கு இடைத்தரகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இல்லையென்றால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நெல்லை தொடர்ந்து சேமித்து வைக்கும் இந்த நபர்களுக்கு அரச வங்கிகளில் இருந்து பெரிய தொகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரிசியின் விலையை அதிகரிக்கும் நோக்கத்துடன் சேமிக்கும் இந்த தனிநபர்களுக்கு வாய்ப்பளிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க மற்றும் குழுவினரால் பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகளில் இன்று (25) சோதனைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .