2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

Freelancer   / 2025 செப்டெம்பர் 13 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி,

"சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமை, நேபாளத்தை அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கு இட்டுச்செல்லும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்," என்று ஜனாதிபதி  பதிவிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 8-ஆம் திகதி நேபாளத்தில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மக்கள் போராட்டங்களில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X