2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நோய்த்தடுப்பு ஊசிகளை வழங்கும் பணிகள் விரைவில்

Editorial   / 2020 ஏப்ரல் 18 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பு ஊசிகளை வழங்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றுநிரூபம் நேற்று வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில், ஊரடங்கு சட்டம் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறையில் தளர்த்தப்படுவதுடன், அதன் பின்னர், வைத்தியசாலையின் பணிகளுக்கு வரையறைகள் விதிக்கப்படும்.

குழந்தைகள் மருத்துவத்தின்போது, சமூக இடைவெளியை பேணுவதற்காக அதிகளவில் மருத்துவ சோதனை நடத்தப்படும் நாட்கள் அதிகரிக்குமாறு துறைசார் தரப்பினரிடம் கோரப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான மருத்துவ சோதனைக்காக தாய்மார்கள் மாத்திரம் மருத்துவமனைக்கு வருகை தருவது மிகவும் சிறந்தாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X