2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

நோர்வூட் பஸ் விபத்தில் 11 பேர் காயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட்  நிவ்வெளிகம பகுதியில் இன்று (15) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும், பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இரு பஸ்களிலும் பயணித்தவர்களில் 11 பேர், காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .