2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுகளுக்கு வருந்துகின்றோம்: மஹேல, சங்கக்கார தெரிவிப்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 28 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுகளுக்கு, தாம் வருந்துவதாக முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வந்த ரசிகர்களுடைய  நுழைவு கட்டணத்தை மீளவழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவ்விருவரும் தங்களுடைய  முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த இசை நிகழ்ச்சியின் போது 5,000 முதல் 50,000 வரை நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டன. உள்ளே  நுளைவுச் சீட்டுக்களின் விலைக்கமைய மதுப்பானம் வழங்கப்பட்டுள்ளதோடு அநாகரிகமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த  இந்த நிகழ்ச்சியை  இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் '‘Live Events’   என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X