2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்: 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், முதலாம் வாசிப்புக்கனெ எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய, நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பான வரவு-செலவுத் திட்டம், எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வரவு-செலவுத்திட்டத்தை சபைக்கு சமர்ப்பித்து அதன் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதமானது, நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தின் இரண்டாவது நாடாளுமன்ற வாரத்தில், 20ஆம் திகதி மட்டும் நாடாளுமன்ற அமர்வை நடத்தி, நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை முதலாம் வாசிப்புக்கென சமர்ப்பிப்பதென்றும் அதன் பின்னர், மீண்டும் இம்மாதம் 25, 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில், நாடாளுமன்ற அமர்வை நடத்துவது என்றும், அதற்கிடைப்பட்ட காலப்பகுதியில், நாடாளுமன்றத்தின் ஒலி கட்டமைப்பை நவீன மாயப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதென்றும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி 4 நாட்கள் அமர்வின் போது, பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதென்றும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .