Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 11 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எஸ். செல்வநாயகம்
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை (FCID) நிறுவுவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோர் மனு (றிட் மனு) நேற்று திங்கட்கிழமை(11), மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது, அதற்கு ஆட்சேபனை தெரிவிக்க சட்டமா அதிபர் காலஅவகாசம் கோரினார். இவ்வழக்கு, மீண்டும் பெப்ரவரி 25ஆம் திகதி எடுக்கப்படும் என நீதியரசர்; விஜித் கே. மலல்கொட தலைமையிலான மூவரடங்கிய குழாம் அறிவித்தது.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவலு அற்றது எனக் கூறும் இந்த மனுவை, வண. எல்ல குணவன்ஸ தேரோ மற்றும் பேராசிரியர் கார்லோ பொன்சேகா ஆகியோர் தாக்கல் செய்தனர்.
குற்றச் செயல்களை விசாரிக்க பொலிஸில் 64 பிரிவுகள் உள்ளபோது, அமைச்சுக்களை உள்ளடக்கிய உப-குழுவொன்றை அமைப்பது சட்டவிரோதமானது என, மனுதாரர்கள் வாதிடுகின்றனர். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவை உருவாக்கவென வெளியிடப்பட்ட பெப்ரவரி 13, 2015ஆம் திகதிக்குரிய 1901ஃ20 இலக்க வர்த்தமானி அறிவித்தலை, வறிதாக்க வேண்டுமெ இவர்கள் கோருகின்றனர்.
மனுதாரர் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி உடித்த எகலஹேவா ஆஜரானதுடன், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பர்ஸானா ஜெமீல் ஆஜரானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .