2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நிதியமைச்சருக்கு மீண்டும் நோட்டீஸ்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், இன்று புதன்கிழமை (12), நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவினால், மதுபான நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலேயே, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், ஏற்கெனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ், உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை என்பதாலேயே, நீதிமன்றத்தினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .