2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நீதியரசர் அப்றூவுக்கு பிணை: கையொப்பமிடாது நழுவ முயற்சி

Gavitha   / 2016 ஜனவரி 13 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவை, ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல, மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, நேற்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தார்.

இதேவேளை, முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவுக்கு எதிராக அதிகுற்றச்சாட்டு பத்திரமும் கையளிக்கப்பட்டது.
கல்கிஸையிலுள்ள தனது வீட்டில் வைத்து, 2015ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, தன் வீட்டுப் பணிப்பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று, அவருக்கெதிராகக் குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ, பிணையில் கையொப்பமிடாது, கைவிரல் அடையாளத்தை வழங்காது, நீதிமன்ற அறையிலிருந்து நீதிபதிகள் வெளியேறும் கதவின் ஊடாவே வெளியேறிவிட்டார்.

இதனையடுத்து, இதுதொடர்பில் முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவுக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்பின்னர் அவர் அழைத்துவரப்பட்டு கையொப்பமும் கைவிரலடையாளமும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் தான் நிரபராதியென்று முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ தெரிவித்தார். அவரது பிணைக்கு, ஊடகவியலாளர் ரொஹான் சரத் அபேவர்தன மற்றும் திவிநெகும அபிவிருத்தி அதிகாரி சிசிர குமார டி சில்வா ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இந்த வழக்கு, மே மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X