2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நீதியரசருக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்தது வெள்ளம்

Kanagaraj   / 2016 மே 23 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாருக் தாஜூதின்

தனது 22 வயதான வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியமை மற்றும் அவருக்கு அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பான முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவுக்கு எதிரான வழக்கு, செப்டெம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சந்தேகநபரான முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவின்  வழக்குரைஞர், நீதிமன்றக்கு நேற்றுத் திங்கட்கிழமை (23) சமுகமளிக்காமல் விட்டமையாலேயே இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு, கொழும்பு  மேல் நீதிமன்ற நீதிபதி நிஸங்கபந்துல கருணாசேனவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வெள்ளம் காரணமாகவே, வழக்குரைஞர், நீதிமன்றத்துக்குச் சமுகமளிக்கவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த வழக்கை ஒத்திவைத்தமைக்கு, அரச தரப்பு வழகுரைஞர் ஹரிப்பியா ஜயசுந்தர எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவுக்கு எதிராக மேல்  நீதிமன்றில்  வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், பினையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

தனக்கு எதிராக சட்டவிரோதமாக வழக்குத் தாக்கல் செய்து, தனது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்றில் நீதியரசர் சரத் டி அப்றூ, மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். ஆயினும், உயர்நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .