2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நான்கு கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே இந்த  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

சார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்றும் வேலைத்திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையை புனரமைக்கும் வேலைத்திட்டம், சிறிய அபிவிருத்திக்கு உதவி வழங்குதல், இந்தியாவில் 17 மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் அவசர சிகிச்சை சேவை அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X