Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) இன்று திங்கட்கிழமை, சமுகமளித்து வாக்குமூலமளித்த. முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அப்பிரிவின் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர், இன்று திங்கட்கிழமை (15) நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமுகமளித்திருந்தார்.
கைதுசெய்யப்பட்ட நாமல் எம்.பியை நீதிமன்றத்தின் ஆஜர்ப்படுத்தியபோது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago