Editorial / 2025 நவம்பர் 11 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றத்திற்கு திங்கட்கிழமை (10) அழைத்து வரப்பட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் வவுனியா பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவரால் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு மோசடியாக வழங்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார், மேலும் அவர் மீதான வழக்கை இந்த மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
6 minute ago
24 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago
33 minute ago