2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

பெங்களூரில் போதைப்பொருட்கள் பறிமுதல்: இலங்கையர் உட்பட மூவர் கைது

Editorial   / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய இரண்டு பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

அவர்கள் வைத்திருந்த உணவு பொருட்கள் தொடர்பான டப்பாக்களில் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 31 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 4 கிலோ சைலோசைபின் காளான் எனப்படும் போதைப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 2 பேரும் தங்களது கூட்டாளி ஒருவர் மற்றொரு விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து மற்றொரு விமானத்தில் வந்த பயணி, அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த பயணியிடமும் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 14 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 2 கிலோ சைலோசைபின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 3 பேரிடமும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.50 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான இலங்கையர் உட்பட 3 பேர் மீதும் விமான நிலைய பொலிஸார் நிலையத்தில் வழக்குப்பதிவாகியுள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X