2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பெங்களூர் விமான நிலையத்தில் இலங்கையர்களுக்கு சிரமம்

Freelancer   / 2023 மார்ச் 19 , மு.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்த பயணிகள் சிலரை தவறுதலாக உள்நாட்டு பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது,

யூ எல் 173 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக பயணித்த 30 பயணிகள் இவ்வாறான நிலைமை எதிர்நோக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறிய பின்னர், அவர்கள் சர்வதேச பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். ஆனால், அவர்கள் மாறாக உள்நாட்டு பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எனினும், சிறிது நேரத்தின் பின்னர் பயணிகள் சர்வதேச பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்டப்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X