Freelancer / 2022 மே 27 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு துணையாக செயற்படும் பட்சத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காலமும் முடிவடையும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள உதவிகள் அரசியல் தலையீடுகளின்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
19 வது திருத்தச் சட்டத்தில் இருந்த சில நன்மையளிக்கும் விடயங்கள் 21வது திருத்தச் சட்டத்தில் இல்லாவிட்டாலும், இரட்டை குடியுரிமையை நீக்குவது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கை அரசியலில் சுமூக நிலைமையொன்று உருவாகும் பட்சத்திலேயே, தொடர்ந்தும் உதவிகளை வழங்க முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ள நிலையில் அதற்கு முன்னராக 21 வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். (a)
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago