2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Freelancer   / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை - ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பக்கமுன பிராந்திய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். 

குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X