2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

“பட்ஜெட்டில் அனைத்து தொகைகளையும் குறைத்துள்ளேன்”

S.Renuka   / 2025 ஜூன் 02 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் வரவு- செலவுத் திட்டத்தில் சாத்தியமான அனைத்துத் தொகைகளையும் குறைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொதுமக்களின் வரிகளில் இருந்து ஒவ்வொரு ரூபாயையும் பாதுகாக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறினார். 

மேலும், அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் தேசிய வரி வாரத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றபோது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைக் கூறினார்.

மேலும் ஜனாதிபதி கூறியதாவது,

நாட்டில் வரி செலுத்துவதில் தயக்கம் இருப்பதை பல்வேறு புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. இதற்குக் காரணம் என்ன? ஒன்று நமது அரசியல் அதிகாரம்.

நமது நாட்டில் வரிப் பணத்தை அரசியல் அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பது குறித்து வரி செலுத்துவோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிறைய விமர்சனங்கள் உள்ளன.

இந்த நாட்டின் வரி செலுத்துவோரிடமிருந்து வசூலிக்கப்படும் பணம் அரசியல் அதிகாரத்தால் அத்தியாவசிய நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற செய்தியை முதலில் வரி செலுத்துவோருக்கு வழங்க வேண்டும்.

அந்தப் பொறுப்பு எனக்கும், அமைச்சகங்களுக்கும், அரசியல் அதிகாரத்திற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் செலுத்தும் எந்தவொரு வரிப் பணத்திலும் ஒரு ரூபாயைக் கூட அரசியல் அதிகாரிகள் மோசடி செய்ய மாட்டார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

ஜனாதிபதியாக, மக்களின் வரிப் பணத்திலிருந்து எனக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சரவை முடிவுகளால் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, அந்த சலுகைகளில் பெரும் எண்ணிக்கையை நாங்கள் விட்டுக்கொடுத்துள்ளோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .