Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு - கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு எதிர் தரப்பினரின் வாக்குகள் இன்றி 11 வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது.
இவ் பாதீடு தொடர்பான அமர்வில், ஏற்பட்ட குழப்ப நிலையால் சபையின் செயலாளர் உட்பட 2 பெண் பிரதேச சபை உறுப்பினர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர் தரப்பினர் பிரிதொரு தினத்தில் சபை அமர்வினை நடாத்துமாறு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தங்களது சபை உறுப்பினர்கள் இருவர் சிறைச்சாலையில் கைதியாகவுள்ளதாகவும் அதனால் பொருத்தமானதொரு தினத்தில் சபை அமர்வினை நடாத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரி இன்றைய தினம் சபை அமர்வினை ஒத்தி வைக்குமாறு, தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
காலை 7 மணிக்கு இடம்பெற்ற குழப்ப நிலையானது 10.30 மணி வரை நீடித்தது. சபை மண்டபத்திற்கான பிரதான நுழை வாயிலை பூட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
.இதேவேளை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் இருந்த அறைக்கதவு பூட்டப்பட்டு காணப்பட்டது. இதனால் தவிசாளர் வெளியேற முடியாத நிலையில் காணப்பட்டார்.
இதனால் கட்சி ஆதரவாளர்களுக்கிடையே பதற்ற நிலை ஏற்பட்டது. கலவரத்தினை தடுக்க பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 9 மணி ஆரம்பமாகவிருந்த சபை அமர்வு குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்படமுடியாத நிலை அசாதாரண சூழ் நிலை காணப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .