Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ், தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொழிலை எதிர்பார்ப்போர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதல் பட்டம் அல்லது அதற்கு நிகரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிப்ளோமா பாடநெறியை 2019.12.31க்கு முன்னர் நிறைவு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
70,000த்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன நிலையில், 56,000 விண்ணப்பங்கள் சரியான மாதிரிகளுக்கமைய பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன், அவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்களில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு,அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர், நியமனத்துக்கு 42,000 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளனர் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இலங்கை தபால் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இன்று மாலைக்குள் தகுதிபெற்ற அனைத்து விண்ணதாரிகளுக்குமான நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், அனைத்து நியமனக் கடிதங்களுக்குமான விநியோகிப்பு பற்றுச்சீட்டினை தபால் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நியமனத்திற்கு பொறுப்பானவராவார். நியமனம் பெற்ற மூன்று நாட்களுக்குள் தமக்குரிய பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடுதல் வேண்டும். எனவும், நியமனக் கடிதம் கிடைத்து 07 நாட்களுக்குள் பயிற்சி நெறிக்கு சமூகம் தராதவிடத்து அந்நியமனம் இரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட பயிற்சிக் காலத்தில், ரூபா 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் என்பதுடன், பயிற்சிக் காலத்தின் பின்னர், ஓய்வூதியத்துடன்கூடிய அரச நிரந்தர சேவையில் உள்வாங்கப்படுவர் எனவும் மாவட்ட ரீதியாக நியமனம் வழங்கப்படுவதுடன், முதல் நியமனம் பெற்ற மாவட்டத்தில், 05 வருடங்கள் சேவையாற்றுவது கட்டாயமானதாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago