2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

பணம் மோசடி ; மூன்று பெண்கள் கைது

Janu   / 2026 ஜனவரி 18 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளபாடங்கள் வழங்குவதாகக் கூறி இணையத்தில் விளம்பரங்களை பதிவிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல நபர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த மூன்று பெண்களை, மேல் மாகாண (தெற்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது மைத்துனி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

 சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கைத்தொலைப்பேசி, தனியார் வங்கி விசா அட்டைகள் இரண்டு மற்றும்  87,000 ரூபாய் பணம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X