2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் ரயில் தொழிற்சங்கங்கள்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை நள்ளிரவிலிருந்து இரண்டு நாள்களுக்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ரயில் துறையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பில் ரயில் சாரதிகள், கட்டுபாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள், ரயில் மேற்பார்வை முகாமைத்துவ ​சேவை அதிகாரிகள்,காவலாளர்கள் ஆகியோர் இணைந்துக்கொள்வார்களென, ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரயில் சார​திகள் மற்றும் ரயில் காவலளாலர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ரயில் மூலம் முன்னெடுக்கப்படும் பொதி விநியோக நடவடிக்கை வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் தொடர்பில், நேற்றைய தினம் போக்குவரத்து அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளதுடன் இவர்களின் முரண்பாடுகள் காரணமாக நாடுபூராகவுமுள்ள ரயில் நிலையங்களில் 5000 வரையான பொதிகள் தேங்கிக் கிடந்ததாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .