2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இன்று (03) இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று (02) முதல் 48 மணி நேரத்தினுள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க தவறினால் தொழிற்சங்க நடவடிக்கையில்  ஈடுபடவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விமான நிலையம் உள்ளிட்ட குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பணிபுரியும் அனைத்து சேவை நிலையங்களை உள்ளடக்கி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் அருண கனுகல தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .