2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பண்டிகைக் காலத்தில் நிவாரணம்

Freelancer   / 2021 டிசெம்பர் 11 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தை விலையை விட குறைந்த விலையில் 50 பொருட்களை லங்கா சதொச விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும தெரிவித்ததாவது,

எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் புத்தாண்டை கருதி சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரிசி போன்ற பொருட்களை வழங்குவதற்கு அண்மைக்காலமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், பண்டிகைக் காலங்களில் அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நாணய கையிருப்பு பற்றாக்குறையால், பால்மாவுக்குப் பதிலாக ஏனைய அத்தியாவசிய பொருட்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும்  சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாட்டுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .