A.K.M. Ramzy / 2020 நவம்பர் 04 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரின் உடையார் வீதி வெட்டுக்குளம் பகுதியில் வசித்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளதாக புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவே, புத்தளம் நகரில் முதலாவது கொரோனா தொற்றாளி இவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர். பரிசோதனை செய்தபோது அது பொஸிடிவ் என்கின்ற நிலையை காட்டி இருக்கின்றது. அந்த நபரின் குடும்ப அங்கத்தவர்களை சுய தனிமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் புத்தளம் வெட்டுக்குளம் உடையார் வீதியில் வசிப்பவர்கள் உடனடியாக மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்கு மாறும் இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago