Freelancer / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சில இனவாத கருத்துக்களால் அதனைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார். R
25 minute ago
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025