Editorial / 2025 நவம்பர் 25 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

16 வயது சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கருதி, அந்த சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு, அச்சிறுமியின் உடலில் தீ மூட்டிய தேவாலயத்தின் பெண் பூசாரி, கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிமுவபொத்தானை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 16 வயது சிறுமியை கரும்பினால் அடித்து, தீப்பந்தத்தால் எரித்து, பலத்த எரி காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார் என ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தானை, வெளிமுவபொத்தானை, கபுகொல்லாவையில் வசிக்கும் 45 வயது திருமணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் தனது அறைகளில் ஒன்றில் “சீதா மைனியன்” என்ற பெயரில் ஒரு தேவாலயத்தை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெய்வீக ஆசீர்வாதத்தால் பெண் பூசாரி நோயாளிகளை குணப்படுத்துகிறார் என்ற தகவலின் அடிப்படையில். மதவாச்சி, பிஹிபியகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் 16 வயது மகளுக்கு சிகிச்சை பெற கடந்த 23 ஆம் திகதி தேவாலயத்துக்குச் சென்றிருந்தனர்.
16 வயது சிறுமியை பேய் பிடித்திருப்பதாக கூறி, பெண் பூசாரி, அந்தச் சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டும் முயற்சியில், கரும்புகையை மூட்டி, அடித்து, எரிந்த தீப்பந்தத்தால் உடலை எரித்ததாக கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெண் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
50 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago